சுடச்சுட

    

    "குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் 126 பெண்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்'

    By அரியலூர்,  |   Published on : 02nd August 2013 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில், குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 126 பெண்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றார் சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் பா. வளர்மதி. 

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

    அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறை மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 491 பேருக்கு ரூ.83.68 லட்சம் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தொட்டில் குழந்தை திட்டத்தில் 5 குழந்தைகள்  பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். சிறார் திருமணத் தடுப்பு சட்டத்தின் கீழ், இதுவரை 78 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வரதட்சிணை கொடுமையால் பாதிக்கப்பட்ட 57 பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், 126 பெண்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

    பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு, பராமரிப்பு சட்டத்தின் கீழ் 16 முதியோருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் நலிவுற்ற 170 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களும், திருநங்கைகளுக்கு 25 % மானியத்தில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் 10 பேருக்கு சிறுதொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மூவாலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தில் 3,849 பேருக்கு, தாலிக்கு தங்கக் காசுகளும், திருமண உதவித்தொகையாக ரூ.12.13 கோடியும், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டத்தில் 458 பேருக்கு தங்கக் காசுகளும், உதவித் தொகையாக ரூ. 1.44 கோடியும், அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டத்தில் 45 பேருக்கு தங்கக் காசுகளும், உதவித் தொகையாக ரூ. 14.25 லட்சமும், டாக்டர் முத்துலட்சுமி அம்மையர் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டத்தில் 60 பேருக்கு தங்கக் காசுகளும், உதவித்தொகையாக ரூ.22.50 லட்சமும், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமண திருமண நிதியுதவித் திட்டத்தில் 8 பேருக்கு தங்கக் காசுகளும், உதவித்தொகையாக ரூ.2 லட்சம் என மொத்தம் 4,420 பேருக்கு 17.68 கிலோ தங்கக் காசுகளும், திருமண உதவித்தொகையாக ரூ.13.96 கோடியும் வழங்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் வளர்மதி. 

    முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலமாக அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு, சமூக நலத்துறை மூலம் மின் ஆளுமை சேவை மையத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வளர்மதி வழங்கினார். 

    கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கவிதா ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, சமூக நல அலுவலர் பூங்குழலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai