சுடச்சுட

  

  உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஜயங்கொண்டத்தில் 3,846 பேருக்கு ரூ.2.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பசாமி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஜீனத்பானு, கோட்டாட்சியர் கஸ்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  முகாமில், 2,654 பேருக்கு கல்வி உதவித் தொகையும், 126 குடும்பங்களுக்கு இயற்கை மரணம் உதவித் தொகையும், 76 பேருக்கு திருமண உதவித் தொகையும், 990 பேருக்கு முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட ரூ.2.10 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பசாமி பேசியது: தமிழக அரசு சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இதுபோன்ற உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால், கிராமப் புறங்களில் வசிக்கும் மக்கள் இதுகுறித்து அறிந்துகொள்ளாமல் உள்ளனர். தங்கள் தங்கள் ஊரில் வசிப்பவர்களுக்கு இதன் பலன்களை எடுத்துக் கூற வேண்டும் என்றார். வட்டாட்சியர்கள் குமசேகரன், ரவி, துணை வட்டாட்சியர் அமுதா, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், துரை, கலிலூர் ரஹ்மான், விக்டோரியா, கலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai