சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம்கள் மூலம் 5,097 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் எம். ரவிகுமார்.

  இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு:

  அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாமில் 348 பேருக்கு ரூ.9.19 லட்சம் மதிப்பபில் கல்வி உதவித் தொகையையும், 68 பேருக்கு ரூ.5.66 லட்சம் மதிப்பில் திருமண உதவித் தொகையும், 46 பேருக்கு ரூ.5.45 லட்சம் மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை என 462 பேருக்கு ரூ.29.30 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

  இதேபோல அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 791 பேருக்கு ரூ.12.03 லட்சம் மதிப்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 3,844 பேருக்கு ரூ.2.16 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

  அரியலூர் மாவட்டம் 90 % வேளாண்மை சார்ந்த மாவட்டமாக உள்ளதால் விவசாயிகள் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெற வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை கிராம மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai