Enable Javscript for better performance
விஷம் குடித்து விவசாயி சாவு - Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

    ஜயங்கொண்டம் அருகே உள்ள மேலூரைச் சேர்ந்த வீரமுத்து மகன் விவசாயி சசிக்குமார் (27). திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாம். வேலைக்குச் செல்லாமல் இருந்த சசிக்குமார், குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்துவாராம். இதனால். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

    இந்நிலையில் புதன்கிழமை மாலை  கல்லாத்ததூர் பிரிவு சாலையில் பூச்சிக் கொல்லியை குடித்த நிலையில் சசிக்குமார் இறந்து கிடந்துள்ளார்.

    இதுகுறித்து ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai