சுடச்சுட

    

    "ஸ்டேட் வங்கி சார்பில் நாட்டில் 40,867 வணிக வசதி மையங்கள்'

    By அரியலூர்,  |   Published on : 02nd August 2013 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கி சேவை இல்லாத கிராமங்களுக்கு சேவை அளிப்பதற்காக இந்தியா முழுவதும் 40,867 வணிக வசதி மையங்கள் ஸ்டேட் வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன என்றார் வங்கியின் ஊரகப் பிரிவு பொது மேலாளர் ராஜீவ்லால்.

    அரியலூரில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

    இந்தியா முழுவதும் வங்கி சேவை இல்லாத கிராமங்களுக்கு சேவை அளிப்பதற்காக ஸ்டேட் வங்கி சார்பில் 40,867 வணிக வசதி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 24,815 மையங்கள் கிராமங்களில் உள்ளன.

    சென்னை வட்டத்தில் 2,406 கிராம வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன.

    இந்த மையங்கள் மூலம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளின் 49,928 வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 12.15 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

    அரியலூர் மாவட்டத்தில் 80 வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் 97,500 சேமிப்புக் கணக்குகளும், 650 தொடர் வைப்பு கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

    மேலும், அரசின் முதியோர் உதவித் தொகையும் இந்த மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன என்றார் ரஜீவ்லால்.

    முன்னதாக, அருங்கால், கருப்பூர், சேனாதிபதி ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வங்கி சேவை மையங்களை அவர் பார்வையிட்டார்.

    அவருடன், உதவிப் பொதுமேலாளர்கள் தேவசேனாதிபதி (சென்னை), பத்மநாபன் (திருச்சி), அரியலூர் முதன்மை மேலாளர்கள் எம்.எஸ். ரவிச்சந்தின், டி. முரளிகிருஸ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai