சுடச்சுட

  

  ஆடி வெள்ளி: மாரியம்மனுக்குபால் குடம் எடுத்த பக்தர்கள்

  By அரியலூர்  |   Published on : 03rd August 2013 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆடி 3-ம் வெள்ளியை முன்னிட்டு அரியலூர் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்.

  அரியலூர் செட்டி ஏரிக்கரையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக நகரை வலம் வந்தனர்.

  இந்த ஊர்வலம் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு மாரியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

  பின்னர் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai