சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மாணவர்களுக்கு சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் என். கனேசன் தலைமை வகித்தார். 

    முகாமில் ஜயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவின் நிர்வாக அலுவலர் வெள்ளச்சாமி மற்றும் வழக்குரைஞர் மாசிலாமணி ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை சட்டங்கள், சட்டப் பணிகள் குழுவின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் குறித்து பேசினர்.

    ஏற்பாடுகளை முதுநிலை ஆசிரியர் ராஜப்பிரியன், பட்டதாரி ஆசிரியர்

    இளஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai