சுடச்சுட

    

    புள்ளம்பாடி வாய்க்காலை திறக்க நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தல்

    By அரியலூர்,  |   Published on : 03rd August 2013 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ள்ளம்பாடி வாய்க்காலை திறக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    அரியலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கக் கூட்டம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. தலைவர் மு. சமுத்திரம் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருமானூர் ஓன்றியத்தின் தென்பகுதி புள்ளம்பாடி பாசனத்தை நம்பியே உள்ளது. இந்த ஆண்டு மழை இல்லாவிட்டாலும், மேட்டூரில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் புள்ளம்பாடி வாய்க்காலை திறக்க வேண்டும் இதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருமானச் சான்று கிடைப்பதில் உள்ள தாமதத்தை நீக்க வேண்டும். அரியலூரிலிருந்து கீழப்பழுவூர் வழியாக மலத்தான்குளம், அயன்சுத்தமல்லி, வேட்டக்குடி, ஏரக்குடி, புத்ததூர், கீழக்காவட்டாங்குறிசச்சி,பாளையப்பாடி வழியாக திருமழபாடி வரை பேருந்துகளை இயக்க வேண்டும். அரியலூர் ரயில் நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் சுகாதார துணை இயக்குநர், மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகங்களை விரைவில் கொணடு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழப்பழுவூரில் சாலை ஓரமாக கட்டப்பட்டுள்ள வடிகாலை சீரமைக்க திருமானூர் ஊராட்சி ஓன்றிய ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு துணைத் தலைவர் சுசீலா, செயற்குழு உறுப்பினர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai