சுடச்சுட

    

    "மாணவர்கள் புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும்

    By 'அரியலூர்  |   Published on : 03rd August 2013 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்லூரி மாணவர்கள் புதிய படைப்புகளை உருவாக்க பாடுபட வேண்டும் என்றார் டால்மியா நிறுவன செயல் இயக்குநர் ஆர்.ஏ. கிருஷ்ணகுமார்.

    அரியலூர் பல்கலைக்கழக் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான  வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது:

    பதக்கங்கள் பெறுவதற்கு முக்கியத்துவம் தராமல், அன்றாட வாழ்க்கைக்கும், சமுதாயத்துக்கும் பயன்படும் கல்வியை மாணவர்கள் கற்க வேண்டும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளைக் கொண்டு புதிய படைப்புகளை உருவாக்க மாணவர்கள் பாடுபட வேண்டும் என்றார்.

    மாணவர்களுக்கு டால்மியா நிறுவனம் மூலம் குறுகிய கால பயிற்சிகளும், வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, கல்லூரி புல முதல்வர் முனைவர் சுப்பிரமணியன் கல்லூரியின் விதிமுறைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறித்து எடுத்துரைத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai