சுடச்சுட

    

    ஆடி 18-ம் பெருக்கு: அரியலூரில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

    By அரியலூர்,  |   Published on : 04th August 2013 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு, அரியலூரில் வீரபத்ர சுவாமிக்கு பக்தர்கள் சனிக்கிழமை பால்குடம் எடுத்துச் சென்று வழிபாடு நடத்தினர்.

    அரியலூரில் பவுண்டு தெருவைச் சேர்ந்த பக்தர்கள் 8-ம் ஆண்டாக பால்குடம் எடுத்து, அலகு குத்தி ஊர்வலமாகச் சென்றனர்.  பக்தர்களின் இந்த ஊர்வலம் செட்டி ஏரிக்கரை விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, மார்க்கெட் தெரு, கைலாசநாதர் கோவில் வீதி, கோர்ட் வழியாகச் சென்று வீரபத்ர சுவாமி  கோவிலை அடைந்தது. அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai