சுடச்சுட

  

  "பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும்'

  By அரியலூர்  |   Published on : 04th August 2013 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.

  அரியலூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத் திறப்பு விழா அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

  விழாவில் நீதிமன்றத்தை தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:

  அரியலூரை அரி-(திருமால்) இல் ஊர் என்று கூறுவர். அதாவது திருமால் உறையும் ஊர் என்று கூறலாம். அதேபோல, இந்த ஊர் புவியியல் சிறப்பும் பெற்றது. இங்கு டைனோசர் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  அரியலூர் மாவட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிக கல்வி கற்றுள்ளனர் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவ்வளவு இருந்தும் ஆண் - பெண் பாலின பாகுபாடு பார்ப்பது, கணவனே மனைவியை கொலை செய்வது என்று வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

  நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன நிலையிலும், பெண்ணுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

  வரதட்சிணை கொடுமை, பெண் சிசுக் கொலை, பெண்களை சீண்டுதல், பெண்களை ஆபாசமாக இணையதளத்தில் வெளியிடுதல் என்று வன்முறையின் எல்லை விரிவடைந்துள்ளது. இவற்றைத் தடுக்க பல சட்டங்கள் இருந்தாலும், அவை யாவும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. எனவேதான், பெண்களின் நலத்தை காக்கவும், அவர்களுக்கான நீதீயை விரைவில் பெற்றுத் தரவும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார் அருணா ஜெகதீசன்.

  நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆர். பத்மநாபன், அரியலூர் பார் அசோசியேஷன் தலைவர் ஏ. செல்வராஜ், அட்வகேட்ஸ் அசோசியேஷன் தலைவர் என். வெங்கடாசலம், தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் உறுப்பினர் ஏ.ஏ. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  முன்னதாக, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே. உத்திராபதி வரவேற்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai