சுடச்சுட

    

    அரியலூர் பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் பெண்களுக்கான ஆடை வடிவமைப்பு இலவச பயிற்சி 21 நாள்கள் நடைபெற்றது.

    இந்த முகாமில் பயிற்சி பெற்ற 24  பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் பாரத ஸ்டேட் வங்கியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, வங்கியின் முதன்மை மேலாளர் எம்.எஸ். ரவிச்சந்திரன் தலைமை வகித்து,  பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசியது:

    பாரத ஸ்டேட் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் அரியலூரில் இதுவரை 575 பயனாளிகள் பல விதமான பயிற்சிகள் பெற்றுள்ளனர். மேலும்,  இவர்களில் 216 பேர் சுய தொழில் மற்றும்  மாத வருமானமும் பெற்று வருகின்றனர். ஏழை, எளிய, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட  பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    பயிற்சி மாணவிகள் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகள் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் ஏழை மாணவிகள் 50 பேருக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொறுப்பு) தாமோதரன்,  மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் டி. முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai