சுடச்சுட

  

  மர தொழிற்கூடத்தில் தீ விபத்து: ரூ. 45 லட்சம் சேதம்

  By ஜயங்கொண்டம்,  |   Published on : 04th August 2013 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் மர தொழிற்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 11.25 லட்சம் ரொக்கம் உள்பட ரூ. 45 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வேலாயுதம் நகரைச் சேர்ந்தவர்  சுப்பிரமணியன் (55). இவர் ஜயங்கொண்டம் - தா. பழூர் சாலையில் மர மின் இழைப்பகம் மற்றும் மர கட்டில், பீரோ, பர்னிச்சர்கள் செய்து விற்பனை செய்கிறார்.

  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை விடுமுறை என்பதால் அருகில் உள்ள தனது வீட்டில் இருந்தாராம். அப்போது, பிற்பகல் 3.30 மணியளவில்  தொழிற்கூடத்தில் மின் கசிவு ஏறப்பட்டு தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தத் தீ அருகில் இருந்த அவரது குடிசை வீட்டிலும் பரவியது. தகவலறிந்த ஜயங்கொண்டம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.

  இந்த தீ விபத்தில் சுப்பிரமணியன் வீட்டிலிருந்த ரூ. 11. 25 லட்சம் ரொக்கம் மற்றும் தொழிற்கூடத்தில் இருந்த தேக்கு மரத்திலான கட்டில், பீரோ, மேஜை, நாற்காலி உள்ளிட்ட மர சாமான்கள், மரங்கள், இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 45 லட்சம் எனக் கூறப்படுகிறது.

  இதையறிந்த ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்லமுத்து, காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உடையார்பாளையம் கோட்டாட்சியர் கஸ்தூரி ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai