மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
By அரியலூர், | Published on : 04th August 2013 03:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஜயங்கொண்டம் பகுதியில் கடந்த சில நாள்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் ரபீக் உசேன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான ஒரு நபரை பிடித்து விசாரித்தார். விசாரணையில், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கீழக்குடியிருப்பைச் சேர்ந்த வெங்கடேசன் என்பதும், அவர் 3 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. பின்னர், அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, வெங்கடேசனை கைது செய்த போலீஸார், அவரை ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.