சுடச்சுட

    

    அரியலூரில் ஓட்டலில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டம், குமுழூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ்(24). அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிகிறார்.

    இந்த ஓட்டலில் ஆக. 1-ல் அரியலூர் புது மார்க்கெட் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(32) சிந்தாமணி தெருவைச் சேர்ந்த கண்ணன் (40) ஆகியோர் சாப்பிட்டுவிட்டு, பணம் கொடுக்கவில்லையாம்.

    இதுகுறித்து கேட்ட சிவராஜை இருவரும் சேர்ந்து தாக்கினராம்.   புகாரின் பேரில் அரியலூர் உதவி ஆய்வாளர் வெண்ணிலா வழக்குப் பதிந்து மணிகண்டன், கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai