சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பெரியார் மெட்ரி மேல்நிலைப்பள்ளி, சிட்டி யூனியன் வங்கி ஆகியன இணைந்து நடத்திய மாநில அளவில் மெட்ரிக் பள்ளிகளுக்கிடையே 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பெரியார் சுழற்கோப்பை நெட்பால் போட்டி பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

  அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். சந்திரன் தலைமை வகித்துப் பரிசு வழங்கிப் பாராட்டினார். மாடர்ன் கல்வி நிறுவன துணைத் தலைவர் எம்.கே.ஆர். சுரேஷ் முன்னிலை வகித்தார். பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் வசந்தி, கமலதாசன் வசந்த் ஆகியோர் வாழ்த்தினர்.

  வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்ற போட்டியில் சென்னை, நாகை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 17 ஆண்கள் அணியினரும், 11 பெண்கள் அணியினரும் பங்கேற்றனர். இதில் ஆண்கள் பிரிவில் பெரியார் மெட்ரிக் மாணவர்கள் முதலிடத்தையும், ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 2-ம் இடத்தையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் ஜயங்கொண்டம் பாத்திமா பெண்கள் பள்ளி மாணவிகள் முதலிடத்தையும், பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தையும் பெற்றனர்.  தேசிய நடுவர் ராம்கணேஷ்குமார், ராஜேஷ், கார்த்திக்கேயன், அன்பரசி, இளமாறன், தர்மராஜ், மோகன், கலைவாணி உள்ளிட்டோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர். பள்ளி முதல்வர் ஜான்பிரிட்டோ வரவேற்றார். அரியலூர் மாவட்ட நெட்பால் கழகச் செயலர் தி. பாண்டியன் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai