சுடச்சுட

    

    அரியலூரில் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    By  அரியலூர்  |   Published on : 06th August 2013 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
     அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியர் எம். ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
     இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 15 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7500 மதிப்பிலான கண் கண்ணாடிகள், மடக்கு ஊன்றுகோல்களும, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.6000 மதிப்புள்ள சக்கர நாற்காலியையும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.1500 மதிப்பிலான கிரட்சஸ் ஊன்றுகோலினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்,
     கூட்டத்தில் மாவ்டட ஆட்சியர் பேசும் போது:
     முதல்வரின் தனிப்பிரிவு மனுக்களுக்கு எந்தவித தாமதமின்றி பதில் அளிக்க வேண்டும், அந்தந்த துறைகளின் சார்பில் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக பதிலளிக்க துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
     இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை வேண்டி என பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி 515 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, மாவட்ட திட்ட மேலாளர் (புதுவாழ்வுத்திட்டம்) சுந்தரேஸ்வரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக அலுவலர்கள் சீனிவாசன், சுவாமிநாதன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai