சுடச்சுட

  

  கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

  By அரியலூர்  |   Published on : 06th August 2013 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
  இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
  மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,30,000 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவையும் எட்டி உள்ளதால் உபரி நீர் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் திங்கள்கிழமை (ஆக. 5) மாலை முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொள்ளிடம் கரையோரங்களில் வசிப்பவர்களும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும், ஆற்றுப் பகுதிகளில் சலவை தொழில் மேற்கொள்பவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  மேலும் கொள்ளிடம் ஆற்றில் ஆடு, மாடு மேய்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  இது குறித்து வருவாய்க் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் கிராம கடை நிலை ஊழியர்கள் ஆகியோர் இரவு பகல் 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai