சுடச்சுட

  

  அரியலூர் அருகேஇளைஞருக்குஅரிவாள் வெட்டு: இருவர் கைது

  By அரியலூர்,  |   Published on : 07th August 2013 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

  அரியலூர் அருகே உள்ள வாரணவாசி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் (26). இவர் கடந்த ஆக. 3-ம் தேதி இரவு சமத்துவபுரம் பகுதியில்  அமர்ந்திருந்தாராம். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த விஜய்,  கலியபெருமாள் மீது மோதுவது போல் வந்தாராம். இதைத் தட்டிக் கேட்டபோது விஜய் நிற்காமல் சென்று விட்டாராம்.

  சிறிது நேரத்தில் திரும்பி வந்த விஜய், கலியபெருமாளை அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் அவருடன் வந்த பழனிசாமி, மற்றும் விஜயின் தாய் சீதா ஆகியோரும் கலியபெருமாளை தாக்கினார்களாம்.

  காயமடைந்த கலியபெருமாள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழப்பழூர் போலீஸார் வழக்குப் பதிந்து விஜய், பழனிச்சாமியை கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai