சுடச்சுட

    

    குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்துக்கு ரூ. 38 லட்சம் ஒதுக்கீடு: அரியலூர் ஆட்சியர்

    By அரியலூர்,  |   Published on : 07th August 2013 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு ரூ. 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார்.

    திருமானூர் ஒன்றியம், கண்டிராதித்தம் ஊராட்சியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் இலவச இடுபொருள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

    விழாவுக்கு எம்எல்ஏ துரைமணிவேல் முன்னிலை வகித்தார். விழாவுக்கு தலைமை வகித்து விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கி ஆட்சியர் பேசியது:

    அரியலூர் மாவட்டத்தில் தா. பழூர், மற்றும் திருமானூர் ஒன்றிய விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ. 28 கோடியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக் 195 வருவாய்க் கிராமங்களில் நடைபெற்று வந்த "அம்மா' திட்ட முகாம்களில் 59,800 மனுக்கள் பெறப்பட்டு, 30,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், உழவர் பாதுகாப்புத்  திட்டத்தின் கீழ் 15,000 பயனாளிகளுக்கு ரூ. 2.50 கோயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறவும், உற்பத்தி செலவை குறைக்கும் வகையிலும் தமிழக அரசு சிறப்பு தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி அரியலூர் மாவட்டத்துக்கு ரூ. 38.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின்படி ஒவ்வொரு ஏக்கருக்கும், 8 பாக்கெட் உயிர் உரம், 5 கிலோ நெல் நுண் சத்து, 1 லிட்டர் உயிரியியல் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் 200 கிலோ ஜிப்சம் ஆகியவை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன், உதவி இயக்குநர் பாபு, கண்டிராதித்தம் ஊராட்சித் தலைவர் தில்லை திருவாசகமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai