சுடச்சுட

    

    பசுமை வீடுகள் திட்டம்:ஆக.10-ல் அரியலூரில் சிறப்பு முகாம்

    By அரியலூர்  |   Published on : 07th August 2013 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பசுமை வீடுகள் கட்டும் திட்டம் தொடர்பாக ஆக. 10-ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் மீதமுள்ள வீடுகளை தகுதியுள்ள நபர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு ஆக. 10-ம் தேதி மாவட்டத்தில் அந்தந்த பகுதி ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மேற்கண்ட திட்டங்களில் வீடு கட்ட விரும்பும் ஆதிதிராவிட விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் தமது குடியிருப்பு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள இடத்துக்கான பட்டா மற்றும் பத்திர நகல், ஜாதிச் சான்று, குடும்ப அட்டை நகல், விண்ணப்பதாரருக்கு மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தைத் தவிர வேறு எங்கும் சொந்தமான வீடு இல்லை என்பதற்கான சான்று, விண்ணப்பதாரர் குடிசை வீட்டில் குடியிருக்கிறார் என்பதற்கான புகைப்பட சான்று, ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai