சுடச்சுட

    

    மேலராமநல்லூர் ஊராட்சியில் வெள்ளத் தடுப்புப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

    By அரியலூர்,  |   Published on : 07th August 2013 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், மேலராமநல்லூர் ஊராட்சியில் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் திங்கள்கிழமை இரவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் செவ்வாய்க்கிழமை திருமானூர், தா. பழூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டார், பின்னர் அவர் கூறியது:

    அரியலூர் மாவட்டத்தில மேலராமநல்லூர் ஊராட்சி மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை 2 மாதங்களுக்கு தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய்க் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் கிராம கடை நிலை ஊழியர்கள் இரவு பகல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வட்டாட்சியர் மற்றும் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்தை அடுத்து காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் பொதுப்பணித் துறை தயார் நிலையில் உள்ளது.

    மேலராமநல்லூர் ஊராட்சிக்கு அவசர காலத்தில் தேவைப்படும் 2 மீட்பு படகுகள் தயார் நிலையில் உள்ளன. எனவே, பொதுமக்கள் வெள்ள அபாயம் பற்றி அச்சமின்றி இருக்கலாம். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும்  செய்ய மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார். ஆய்வின்போது வருவாய்க் கோட்டாடசியர் கணபதி, திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் சீனிவாசன், வட்டாட்சியர் முருகன், வட்டார வளர்சசி அலுவலர்கள் சந்திரசேகரன், மணிமொழி வருவாய்த் துறை மற்றும் வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai