சுடச்சுட

    

     கொலை வழக்கில் தேடப்பட்டவர்  16 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

    By  அரியலூர்,  |   Published on : 08th August 2013 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
     முனியதிரான்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் சங்கர் (27). இவரும், அதே ஊரைச் சேர்ந்த மைனர் மகன் மாசிலாமணியும் (25) கேரளத்தில் பணியாற்றிய போது, பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
     இந்நிலையில், கடந்த 3.11.1997 -ம் தேதி மாசிலாமணியும், அவரது நண்பர்கள் உதயகுமார் (20), சீனிவாசன் (23), கலியமூர்த்தி (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து வடவீக்கம் அருகே சங்கரை வெட்டிக் கொலை செய்தனர்.
     இதுகுறித்து ஜயங்கொண்டம் போலீஸôர் வழக்குப் பதிந்து, உதயகுமார், சீனிவாசன், கலியமூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
     மேலும், தலைமறைவாக இருந்து வந்த மாசிலாமணியை சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பூரில் செவ்வாய்க்கிழமை போலீஸôர் கைது செய்தனர்.
     இதையடுத்து, மாசிலாமணியை ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் போலீஸôர் ஆஜர்படுத்தினர்.
     அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai