சுடச்சுட

  

  அரியலூர் அருகே கடன் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில், இளைஞரை தாக்கியதாக 2 பேரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
   அரியலூர் அருகேயுள்ள விக்கிரமங்கலத்தை அடுத்த குமணந்துரை நடுத்தெருவைச் சேர்ந்த செல்வகணேஷ் (32), அதே ஊரைச் சேர்ந்த இளவரசனிடம் (27) ரூ. 1.30 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். அந்தக் கடனுக்கு ஈடாக தனது 20 செண்ட் நிலத்தை எழுதிக் கொடுத்திருந்தாராம்.
   இந்நிலையில், தான் கொடுத்த கடனுக்கு 20 செண்ட் நிலம் போதாது என்றும், மேலும் நிலத்தை வழங்க வேண்டும் எனக் கூறி இளவரசனும், செல்வபெருமாள் (61) என்பவரும் செல்வகணேஷிடம் தகராறு செய்து, அவரைத் தாக்கினார்களாம்.
   இதுகுறித்து செல்வகணேஷ் அளித்த புகாரின்பேரில், விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் யோகரத்தினம் வழக்குப் பதிந்து, இளவரசன், செல்வபெருமாளை கைது செய்தார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai