சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் நிலக்கரி திட்டம்:  நிலம் வழங்கியவர்களுக்கு வட்டியுடன்  முழு தொகை வழங்க உத்தரவு

    By  ஜயங்கொண்டம்  |   Published on : 08th August 2013 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தில் நிலம் வழங்கியவர்களுக்கு ஒரு செண்ட் நிலத்துக்கு ரூ. 2750-ம், அதற்குண்டான வட்டியுடன் சேர்த்து முழு தொகையும் வழங்க வேண்டுமென ஜயங்கொண்டம் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
     ஜயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு இழப்பீட்டுத் தொகையாக ஒரு செண்ட் நிலத்துக்கு ரூ. 200 முதல் 250 வரை வழங்கப்பட்டது.
     அதைத் தொடர்ந்து உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என நிலம் இழந்தவர்கள் பல்வேறு போராட்டங்களை நட்த்தினர்.
     இதையடுத்து, இதற்கென ஜயங்கொண்டத்தில் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இங்கு விவசாயிகள் தனித் தனியாக தங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
     இந்நிலையில், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி மகன் கலியபெருமாள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ப.உ. செம்மல், அவருக்கு ஒரு செண்ட் நிலத்துக்கு ரூ. 2750-ம், ஆறுதல் தொகையாக 30 சதவீதமும், நிலம் கையகப்படுத்திய தேதியில் இருந்து ஓராண்டுக்கு 9 சதவீத வட்டியும் சேர்த்து முழு தொகையும் வழங்கும் காலம் வரை 15 சதவீத வட்டியும் சேர்த்து முன்பு வழங்கப்பட்ட தொகை போக மீதமுள்ள தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
     மேலும், இப்பகுதியில் அதிகளவில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதற்கு மரம் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரமும், இதேபோல் ஆறுதல் தொகை மற்றும் வட்டியும் வழங்குமாறு தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai