சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவர் ஜெய்சுதா சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சின்னதுரை முன்னிலை வகித்தார்.
   என்எல்சியின் 5 சதவீதப் பங்கை தமிழகத்துக்குப் பெற்றுத் தந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
   கூட்டத்தில் உறுப்பினர் ப. தவசீலன் பேசியது: 2011-12 ஆம் ஆண்டில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், முதல்வரின் கனவுத் திட்டமான சூரிய ஒளி மின் விளக்குகள் அமைக்கப்படாததால், அவை பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 2012-13 ஆம் ஆண்டில் முதலில் 18 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
   அவர்கள் வீடு கட்டுவதற்கான அஸ்திவாரமும் போட்டுவிட்டனர். ஆனால், தற்போது, 7 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கும் வீடுகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   உறுப்பினர் கண்ணன் பேசியது: சோழமாதேவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு அருகில் இரண்டு செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர்கள் இயக்கப்படுவதால், ஏற்படும் அதிக ஒலியினால் மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே, அதை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   கூட்டத்தில் உறுப்பினர்கள் ராமச்சந்திரன், அனைகுடம் சுப்பிரமணியன், அம்பாபூர் சுப்பிரமணியன், ரத்தின அன்பழகன், தவசீலன், கண்ணன், குணசீலன், கல்யாணசுந்தரம், பஞ்சநாதன், ஜெயசித்ரா, தனலட்சுமி, மங்கையர்கரசி, கலையரசி பவுனாபதி, கலாநிதி, துணை ஆணையர் முருகன் உள்ளிடோர் பங்கேற்றனர்.
   முன்னதாக, ஆணையர் பாலுசாமி வரவேற்றார். உதவி பொறியாளர் விஜயன் நன்றி கூறினார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai