சுடச்சுட

  

  திருமானூரில் புதிய வட்டம் அமைக்க தேமுதிக வலியுறுத்தல்

  By  அரியலூர்  |   Published on : 08th August 2013 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், திருமானூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்று தேமுதிக மகளிர் அணி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
   அரியலூர் மாவட்ட தேமுதிக மகளிர் அணி செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி செயலர் ராணி ஜோசப் தலைமை வகித்தார். சா. அஞ்சலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலர் ராம. ஜயவேல் பேசினார்.
   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆகஸ்ட் 25 -ம் தேதி தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும், அன்னதானம், ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பேனா வழங்கியும் கொண்டாடுவது.
   செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் மகளிர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்வது. விஜயகாந்த் மற்றும் பிரேமலதா மீது தொடர்ந்து பொய் வழக்குப் போடும் தமிழக அரசை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.
   திருமானூர், தா. பழூர் ஒன்றிய டெல்டா விவசாயிகளுக்கு இலவசமாக விவசாய ஆதார நெல் மற்றும் விளைபொருள்களை வழங்க வேண்டும்.
   திருமானூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   இதில் ஒன்றியச் செயலர் செல்வராஜ், அரியலூர் நகரத் தலைவர் க. சிவா, திருமானூர் ஜோசப் சத்தியமூர்த்தி, செ. ராணி, எஸ். செல்வராணி, ப. சுமதி, இளவரசி, மாலதி, மகாதேவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   முன்னதாக, கட்சியின் துணைச் செயலர் வ. கமலம் வரவேற்றார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai