Enable Javscript for better performance
விவசாயி வீட்டில்  15 பவுன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் செவ்வாய்க்கிழமை 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     ஜயங்கொண்டம் அருகேயுள்ள மெய்க்காவர் புத்தூரைச் சேர்ந்தவர் சிவகணேசன் (47). விவசாயக் கூலி தொழிலாளி. இவரும், அவரது மகன், மகள் அனைவரும் செவ்வாய்க்கிழமை வயல் வேலைக்குச் சென்றனராம். இந்நிலையில், பிற்பகலில் சாப்பிடுவதற்காக சிவகணேசனின் மகள் ராஜலட்சுமி வீட்டுக்கு வந்தாராம். அப்போது, வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்துள்ளது.
     வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 தங்க வளையல்கள், மோதிரம் உள்ளிட்ட 15 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் சதீஸ் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai