சுடச்சுட

    

    இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் டெசோ அமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும் குன்னம்  தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். எஸ். சிவசங்கர் தலைமை வகித்தார். திக மாவட்டச் செயலாளர் காமராஜ், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட பொறுப்பாளர் இலக்கியதாசன் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட நடிகர் குமரிமுத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் பெருநற்கிள்ளி, மாவட்ட துணைச் செயலர்கள் சாந்தி, தனபால், முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், தில்லைகாந்தி மற்றும் திமுக, திக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai