சுடச்சுட

  

  அரியலூர் அருகேஅழுகிய நிலையில்முதியவர் சடலம்

  By அரியலூர்,  |   Published on : 09th August 2013 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் அருகே அழுகிய நிலையில் கிடந்த முதியவர் சடலம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

  அரியலூரை அடுத்த பார்ப்பனச்சேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (62) விவசாயி. உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஆறுமுகம் கடந்த ஜூலை 23 ஆம் தேதி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

  இது குறித்து அவரது மனைவி மலர்க்கொடி அரியலூர் நகர காவல் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை (ஆக. 1) புகார் செய்திருந்தார்.

  இந்த நிலையில் பார்ப்பனச்சேரி செல்லும் வழியில் முள் புதரில் அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் மலர்க்கொடியையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு இறந்து கிடந்தவர் தனது கணவர் ஆறுமுகம்தான் என்பதை மலர்கொடி உறுதி செய்தார்.

  கீழப்பழூர் போலீஸார் வழக்குப் பதிந்து ஆறுமுகம் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai