Enable Javscript for better performance
அரியலூர் மாவட்ட புதிய ஆட்சியர்சரவணவேல்ராஜ் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட புதிய ஆட்சியர்சரவணவேல்ராஜ் பொறுப்பேற்பு

    By அரியலூர்,  |   Published on : 09th August 2013 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சரவணவேல்ராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த எம். ரவிக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து அரியலூர் மாவட்ட புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்ட சரவணவேல்ராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பசாமி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

    ஆட்சியர் சரவணவேல்ராஜ் இதற்கு முன்பு நாகர்கோவில், தேவக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியராகவும், பின்னர் வருவாய் நிர்வாகத் துறையில் உதவி ஆணையராகவும், தேனி, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மூத்த மண்டல மேலாளராகவும், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் மூத்த மண்டல மேலாளராகவும் தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர், பள்ளிக்கல்வித் துறை துணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    சென்னையை சொந்த ஊராகக் கொண்ட சரவணவேல்ராஜ்க்கு மனைவி, ஒரு பெண்,  ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai