ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
By அரியலூர், | Published on : 09th August 2013 04:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணியினர் அரியலூரில் புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும். தொடக்கக் கல்வியில் ஆங்கில வழிக் கொள்கை திணிப்பு முடிவை கைவிட வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத்தலைவர் கோ. ஞானசண்முகம் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ஒ. கருணாநிதி வரவேற்றார். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் அ. நல்லப்பன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட முன்னாள் செயலாளர் வே. ராஜேந்திரன், மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.