Enable Javscript for better performance
தேமுதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஜூம்ஆ பள்ளிவாசலில் புதன்கிழமை நடைபெற்றது.

    அரியலூர் மாவட்ட தேமுதிக வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சிராஜூதீன் வரவேற்றார். பள்ளி வாசல் முத்தவல்லி எம். எஸ். நூர்முகமது தலைமை வகித்தார். இதில் அரியலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் ராம. ஜயவேல், பள்ளிவாசல் இமாம் சையதுமுஸ்தபா அன்வாரி நகர்மன்ற உறுப்பினர் சிட்டிபாபு, மாவட்ட இளைஞர் அணி செயலர் தாமஸ் ஏசுதாஸ், மாவட்ட மாணவர் அணி செயலர் தர்மராஜ், நகர பொருளாளர்  ராஜா, மாவட்ட பிரதிநிதி சேகர், செந்தில்குமரன், முருகேசன், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரியலூர் நகர அவைத் தலைவர் சிவா செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai