Enable Javscript for better performance
மனைவியை கொல்ல முயன்றதாககணவர் மீது புகார்- Dinamani

சுடச்சுட

    

       அரியலூர் அருகே மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    அரியலூர் அருகே உள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (42). இவரது மனைவி ஜெயா (37). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது.  தம்பதிகள் இருவரும் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

    சில நாள்களுக்கு முன்பு ஊர் திரும்பிய இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாம். புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் ஜெயாவின் தலையில் கருங்கல்லால் செல்வம் தாக்கினாராம். இதில் பலத்தக் காயமடைந்த ஜெயா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்குப் பதிந்து செல்வத்தை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai