சுடச்சுட

    

    அரியலூர் அருகே முதியவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

    By அரியலூர்,  |   Published on : 10th August 2013 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : அரியலூர் அருகே முதியவரிடம் வியாழக்கிழமை தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம், மேலநெடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சூசைராஜ் (70). இவர் வியாழக்கிழமை பிற்பகலில் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சூசைராஜிடம் குடிக்கத் தண்ணீர்  கேட்டுள்ளனர்.

    அவர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது, அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.

    இதில் சுதாரித்துக் கொண்ட சூசைராஜ், சங்கிலியை  பிடித்துக் கொண்டாராம். அப்போது, அந்த சங்கிலியில் இருந்து சுமார் 10 கிராம் அளவுள்ள நகையை அவர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai