Enable Javscript for better performance
ஆடி வெள்ளி: மாரியம்மனுக்கு பால்குடம்- Dinamani

சுடச்சுட

    

    ஆடி 4 -வது வெள்ளியை முன்னிட்டு, அரியலூரில் பக்தர்கள் மாரியம்மனுக்கு  பால்குடம் எடுத்து அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

    இதேபோல், அரியலூர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தேசமாரியம்மன், சேர்வைக்காரத்தெரு  முக்கண்மாரியம்மன், பூக்காரத்தெரு மாரியம்மன் ஆகிய கோவில்களைச் சேர்ந்த பக்தர்கள் மேள

    தாளம் முழங்க வெள்ளிக்கிழமை காலை செட்டி ஏரிக்கரையில் உள்ள  விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். அவர்கள் பால்குடம் எடுத்தும், அலகு, வேல் அலகு குத்தியும் வந்தனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, அந்தந்த கோவிலை அடைந்தது. அங்கு மாரியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்  செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai