சுடச்சுட

    

    அரியலூர் அருகே சிமென்ட் ஆலையில் திருட முயன்றதாக 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    அரியலூரை அடுத்த தாமரைக்குளத்தில் டால்மியா சிமென்ட் ஆலை உள்ளது. இந்த ஆலையின் சுற்றுச் சுவரைத் தாண்டி உள்ளே குதித்து அங்கிருந்த இரும்புப் பட்டைகள் மற்றும் இரும்பு தளவாடப் பொருள்களை 3 பேர் திருடிக் கொண்டிருந்தனராம்.

    இதைப் பார்த்த அந்த ஆலையின் பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பாளர் மாசிலாமணி அவர்களைப் பிடித்து, அரியலூர் போலீஸில் ஒப்படைத்தார்.

    விசாரணையில், அவர்கள் அரியலூர் மாவட்டம்,  ஓட்டக்கோவிலைச் சேர்ந்த ஆனந்தக்குமார் (21), அழகர் (26), குறிச்சிக்குளம் அருண்பாண்டியன் (17) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான இரும்புப் பட்டைகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai