Enable Javscript for better performance
ரம்ஜான்: அரியலூர் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை- Dinamani

சுடச்சுட

    

    ரம்ஜான்: அரியலூர் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை

    By அரியலூர்,  |   Published on : 10th August 2013 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் ஜூம்மா பள்ளிவாசலில்  ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத்  தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு,  அரியலூர் ஜூம்மா பள்ளிவாசலில் முத்தவல்லி  நூர்முகமது தலைமையில் சிறப்புத் தொழுகை  நடைபெற்றது.

    அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜியாவுல்ஹக், ரஜாக்டிரேடிங் அப்துல்ரஜாக், டாக்டர் அகமதுஷெரீப், அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட பொறுப்பாளர் ரகீம், ஜபருல்லா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai