சுடச்சுட

    

    நடிகர் விஜய் நடித்த படத்துக்கு தடையை நீக்கக் கோரி அரியலூரில் அவரது ரசிகர்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் செய்தனர்.

    நடிகர் விஜய் நடித்த தலைவா  திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமை திரைப்படம்   வெளியாகவில்லை.

    இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று கோரி அரியலூர் நடராஜா திரையரங்கம் முன்பு அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற மாவட்ட அமைப்பாளர் பவுன்ராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அரியலூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர்  வீரபாண்டியன், வட்டாட்சியர் முருகன் ஆகியோர் ரசிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai