Enable Javscript for better performance
அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை

    By அரியலூர்,  |   Published on : 11th August 2013 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன மழையால் பாதிக்கப்பட்ட அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் கனரக வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அரியலூரிலிருந்து ஜயங்கொண்டம், முட்டுவாஞ்சேரி செல்லும் சாலையில் உள்ள பழைய பாலம் பழுதடைந்ததால், அந்தப் பாலம் இடிக்கப்பட்டு புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்துக்கு  தாற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    அரியலூரில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்ததால், அந்த  தாற்காலிகத் தரைப்பாலம் அரித்து சேதமடைந்துள்ளது. எனவே, அந்த  தரைப்பாலத்தில் பேருந்து, ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்று வரலாம். லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    ஆட்சியர் அறிவிப்பைத் தொடர்ந்து, தரைப் பாலத்தின் இருபுறமும்  போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai