Enable Javscript for better performance
செல்போன் கடையில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    உடையார்பாளையத்தில் உள்ள செல்போன் கடையில் 3 செல்போன் மற்றும் ரூ. 12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தெற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் சபிபாஷா (31). உடையார்பாளையத்தில் செல்போன் கடை வைத்துள்ளார்.

    இவர் வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றாராம். பின்னர், வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறந்துபார்த்தபோது,  கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்தது.

    மேலும், கடையில் இருந்த

    ரூ. 2800 மதிப்பிலான 3 செல்போன்கள் மற்றும் ரூ. 12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து உடையார்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai