சுடச்சுட

    

    அரியலூரில் பொதுக் குழாயில்  தண்ணீர் பிடிக்கும் தகராறில் விவசாயியை  தாக்கியதாக தம்பதி மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.

    அரியலூர் அருகேயுள்ள கோவிந்தபுரம்  பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர்  சுப்பிரமணியன் (59). விவசாயி. இவரது  பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராமலிங்கம் (59), அவரது மனைவி மலர்க்கொடி (45), மகன் படைக்காத்து (24).

    சுப்பிரமணியனுக்கும், ராமலிங்கத்துக்கும் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதேபோல், வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் ராமலிங்கம், அவரது மனைவி, மகன் மூவரும் சேர்ந்து சுப்பிரமணியனை விறகு கட்டையால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயமடைந்த அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் படைக்காத்தும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில், ராமலிங்கம், மலர்க்கொடி ஆகியோர் மீது அரியலூர் காவல் உதவி ஆய்வாளர் அதியவரம் வழக்குப் பதிந்து அவர்களைத் தேடி வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai