சுடச்சுட

    

     விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By அரியலூர்,  |   Published on : 12th August 2013 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் 2013-14 ஆம் ஆண்டில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எஸ்டிஏடி எனப்படும் ஊக்க உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் செல்வகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க உதவித்தொகை ரூ.10,000-மும் மற்றும் கல்லூரி பல்கலைக்கழக் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.13,000-மும் ஊக்க உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது.

    தகுதிகள்: 1-7-2012 முதல் 30-6-2013 வரையிலான காலகட்டத்தில் விளையாட்டுத் துறையில் வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

    தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுக் குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டுக் கழகங்கள்,இந்திய விளையாட்டுக் குழுமம் நடத்திய போட்டிகள், அகில  இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வென்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பத்தை அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடமிருந்து பெற்று ஆக. 31-க்குள் தக்க சான்றிதழ்களுடன் அவரிடம் நேரில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-294395 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai