சுடச்சுட

  

  செந்துறை - பெண்ணாடத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை

  By அரியலூர்  |   Published on : 12th August 2013 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், செந்துறையிலிருந்து கடலூர் மாவட்டம், பெண்ணாடத்துக்கு சிற்றுந்து இயக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சோழன்குடிகாடு எஸ்.எஸ். கணேசன் அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த கோரிக்கை மனு விவரம்:

  அரியலூர் மாவட்டம், செந்துறையிலிருந்து இலைக்கடம்பூர், உகந்தநாயக்கன்குடிகாடு, நத்தக்குழி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, நந்தியன்குடிக்காடு, மற்றும் ஆர்.எஸ். மாத்தூர் வழியாக பெண்ணாடத்துக்கு இயங்கிய ஒரு   சிற்றுந்து கடந்த ஓராண்டாக இயக்கப்படவில்லை.

  இதனால் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அரியலூர் வந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

  எனவே ஆட்சியர் உடனடியாக மீண்டும் சிற்றுந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மேலும் செந்துறையிலிருந்து வஞ்சினபுரம்,நல்லநாயகபுரம், குமுளூர் வழியாக பெண்ணாடத்துக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட சிற்றுந்தையும் இயக்கிட வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai