Enable Javscript for better performance
பெண்ணைத் தாக்கியதாக தம்பதி கைது - Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே வயலில் ஆடு மேய்ந்த தகராறில் பெண்ணைத் தாக்கியதாக கணவன் - மனைவி சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள பொட்டகுளம் அய்யனார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணவாளன், இவரது மனைவி ஜோதி (48).

    இவர்களுக்குச் சொந்தமான முருங்கை வயலில் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜனின் ஆடுகள்  மேய்ந்தனவாம்.

    இதுகுறித்து ஜோதி நடராஜனிடம் சென்று கேட்டபோது நடராஜன், அவரது மனைவி கவிதா (32) ஆகியோர் அவரைத் திட்டித் தாக்கினராம்.

     இதில் காயமடைந்த ஜோதி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    புகாரின்பேரில் மீன்சுருட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி வழக்குப் பதிந்து  நடராஜன், கவிதா ஆகியோரைக் கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai