சுடச்சுட

    

    மீன்சுருட்டி அருகே சாலை விபத்தில் தாய் - மகன் காயம்

    By அரியலூர்  |   Published on : 12th August 2013 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீன்சுருட்டி அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகன் காயமடைந்தனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ராணி (45), மகன் அருண் (24). தாயும், மகனும் சனிக்கிழமை மீன்சுருட்டி அருகேயுள்ள கூட்டு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மீன்சுருட்டி சின்ன மார்க்கெட் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் ஓட்டி வந்த கார் அருண் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண், ராணி இருவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  மீன்சுருட்டி போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai