சுடச்சுட

    

    அரியலூர் அருகே விவசாயியைத் தாக்கியதாக இளைஞர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகேயுள்ள அழிக்குடி நடுத் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் (60), விவசாயி.

    இவரது உறவினரான பாரதி (30) கடந்த 8 ஆம் தேதி அழிக்குடியில் உள்ள பரமசிவத்துக்குச் சொந்தமான கிணற்றுக் கொட்டகை முள்வேலியை கீழே தள்ளிவிட்டாராம்.  இதுகுறித்து கேட்ட பரமசிவத்தை கீழே தள்ளி விட்டு பாரதி தாக்கினாராம்.

    இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் தா. பழூர் சிறப்பு உதவி ஆய்வாளர் காமராஜ் வழக்குப் பதிந்து பாரதியை சனிக்கிழமை கைது செய்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai