சுடச்சுட

    

    அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 4.50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    உதவிகளை வழங்கி அவர் பேசியது:

    முதல்வரின் தனிப் பிரிவுக்கு வரும் மனுக்கள் மீது உடனடியாகப் பரிசீலனை செய்து பதிலளிக்க வேண்டும். அந்தந்தத் துறைகளின் சார்பில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனடியாகப் பதிலளிக்க துறை அலுவலர்கள் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

    கூட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.36,100 மதிப்பில் கல்வி உதவித் தொகை காசோலை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் 2012-ல் நடைபெற்ற அரசுப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 10 மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ. 28,000 மதிப்பில் புதுப்பித்தல் பரிசுத்தொகைக்கான காசோலை, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ. 14,071 மதிப்பிலான மடிக் கணினிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

    கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, காவல் துறை நடவடிக்கை கோரி பொதுமக்கள் அளித்த 418 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  அ. கருப்பசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், வட்டாட்சியர் தண்டபாணி, அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூரில்... பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்குத் தலைமை வகித்த, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 368 மனுக்கள் பெறப்பட்டன.

    தனித்துணை ஆட்சியர் அமலநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai