சுடச்சுட

    

    அரியலூரில் மழையால் சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரி  நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

    அரியலூர் நகரிலுள்ள சடையப்பப் படையாட்சி பிரதான சாலை, கோசிநகர் குறுக்குச் சாலைகள் அண்மையில் பெய்த மழையாலும், புதைச் சாக்கடை திட்டத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டதாலும் குண்டும் குழியுமாக உள்ளன. மேலும் அந்தப் பள்ளங்களில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.

    இதையடுத்து இந்தச் சாலைகளை சீரமைக்கக் கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை அரியலூர் நகராட்சி அலுவலகம் முன் மறியல் செய்யக் கூடினர். தகவலறிந்த நகராட்சி ஆணையர் (பொ) இளஞ்செழியன், நகரக் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai