சுடச்சுட

    

    சுதந்திர தினம்: அரியலூரில் போலீஸார் தீவிர வாகனச் சோதனை

    By அரியலூர்,  |   Published on : 13th August 2013 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சோதனைச் சாவடிகள், ரயில், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் கூடுமிடங்களில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய, விடிய சோதனை மேற்கொண்டனர்.  இதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, மதுபானம் குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, லாரியில் ஆள்களை ஏற்றிச் சென்றது,அதி வேகமாக வாகனம் ஓட்டியது, அதிகப் பாரம் ஏற்றியது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக 306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இந்தச் சோதனையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 காவல் நிலைய போலீஸார், நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் ஈடுபட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai